எந்திரன் ஆடியோ விழாவை ஏன் மலேசியவில் நடத்த வேண்டும்?
தெலுங்கு ஆடியோவையும் மலேசியாவிலேயே நடத்தியிருக்கலாமே ஏன் ஹதாராபாத்தில் நடத்தினார்கள்?
அதிக பொருட்செலவில் எந்திரனை தயாரித்த கலாநிதி ஆடியோ விழாவை மிகப் பிரமாண்டமாக் நடத்த நினைத்தார், தமிழகத்தில் நடத்தினால், கருணாநிதியை கூப்பிடாமல் நடத்த முடியாது. அப்படியே கூப்பிட்டு நடத்தினாலும் அது எந்திரன் விழாவாக இருக்காது, பாசத்தலைவனுக்கு மற்றுமொரு பாராட்டுவிழாவாக மாறிவிடும்.,இது மற்ற கட்சிகளின் பார்வையாளர்களை இழக்க நேரிடும். இதை உண்ர்ந்த கலாநிதியின் பிசினஸ் மூளை மலேசியவை தேர்ந்தெடுத்தது. இதுதான் கருணாநிதிக்கு பயந்து கலாநிதி செய்த தந்திரம்.
இது தெரியாத பிரகாஷ்ராஜ் போன்றவர்கள் , தமிழ்நாடு, தமிழன் அப்படி இப்படி பேசிக்கிட்டு இருக்காங்க.
பணம் சம்பாதிக்கமட்டும்தான் அரசியல். பணத்தை இழப்பதற்க்கு அல்ல.
இதுதான் கலா "நிதி"தத்துவம்
